நந்தா பொறியியல் கல்லூரிக்கு சர்வதேச விருது
நந்தா பொறியியல் கல்லூரி மாணவர்கள்
ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியின் கட்டுமான பொறியியல் துறை கடந்த 2017ம் ஆண்டு முதல் அமெரிக்க கான்கிரீட் நிறுவனத்தின் மாணவர் பிரிவு செயல்பட்டு வருகிறது. இப்பிரிவின் சார்பில் மாணவர்களுக்கு சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு வகையான தொழில்நுட்ப கருத்தரங்கங்கள், கான்கிரீட் ஆய்வு பணிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
நடப்பு கல்வி ஆண்டிற்காக அமெரிக்க கான்கிரீட் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு சர்வதேச அளவிலான போட்டிகளின் மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் சுமார் 57 பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு விருதினை வழங்கி கவுரவித்துள்ளது. இந்நிலையில், நந்தா பொறியியல் கல்லூரியின் கட்டுமான பொறியியல் துறையானது தொடர்ந்து 4வது முறையாக சர்வதேச விருதினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், அமெரிக்காவின் கான்கிரீட் நிறுவனத்தின் இந்திய அத்தியாயம் மூலமாக 2ம் ஆண்டு பயிலும் பிரேம்குமார் மற்றும் 3ம் ஆண்டு பயிலும் ரித்திகா, யோகேஸ்வரி ஆகியோருக்கு அகாடமியின் முதன்மை விருது வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய விருதுக்காக ரூ.45 ஆயிரம் ரொக்க பரிசுக்கான காசோலையும் வழங்கி சிறப்பித்துள்ளது. விருது பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியின் முதல்வர் யு.எஸ்.ரகுபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
விருதுகள் பெற்ற மாணவர்களுக்கு வழிகாட்டியாக துணைபுரிந்த அமெரிக்க கான்கிரீட் நிறுவன மாணவர் பிரிவின் ஆலோசகரும் துறையின் புலமுதல்வருமான ஈ.கே.மோகன்ராஜ் மற்றும் உதவி பேராசிரியர் சி.யு.மணிகண்டன் ஆகியோர்க்கு ஸ்ரீ நந்தா அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன், செயலாளர் எஸ்.நந்தகுமார் பிரதிப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் எஸ்.திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி எஸ்.ஆறுமுகம் ஆகியோர் தனது பாராட்டுகளை தெரிவித்தனர்.