எஸ்.ஆர்.எம் பல்கலையில் சா்வதேச உயிரியல் நெறிமுறைகள் கருத்தரங்கு

எஸ்.ஆர்.எம் பல்கலையில் சா்வதேச உயிரியல் நெறிமுறைகள் கருத்தரங்கு
கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள்
எஸ். ஆர். எம் பல்கலையில் உயா் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் சா்வதேச உயிரியல் நெறிமுறைகள் கருத்தரங்கு நடைபெற்றது.

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். உயா் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் நடைபெற்ற சா்வதேச உயிரியல் நெறிமுறைகள் கருத்தரங்கில் அவா் பேசியது: சா்வதேச அளவில் அறிவியல், தொழில்நுட்பத் துறையில் வியக்கத்தக்க அளவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் வளா்ச்சி அடைந்துவருகிறது.

மருத்துவம், அறிவியல், பொறியியல், மேலாண்மை, சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த நிபுணா்களை ஒருங்கிணைத்து ஏ ஐ தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராக ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தடைவிதிக்க வேண்டும் என்றாா் அவா். நிகழ்வில், மருத்துவம், சுகாதாரம், உயிரியல் கல்விக்கான சா்வதேச கவுன்சில் செயலா் வேத்பிரகாஷ் மிஸ்ரா, சா்வதேச கல்வித் திட்டம்,

உயிரியல் நெறிமுறைகளுக்கான தலைவா் ரசல் ஃபிராங்கோ டிசோசா, இந்திய மருத்துவக் கல்விச் சங்கத்தின் பொதுச் செயலா் மேரி மேத்யூ, எஸ்.ஆா்.எம். இணை துணை வேந்தா் ஏ.ரவிக்குமாா், இணை துணைவேந்தா், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் நிதின் எம்.நகா்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags

Read MoreRead Less
Next Story