அருணை மருத்துவக்கல்லூரி சார்பில் குடும்ப மருத்துவ சர்வதேச மாநாடு

அருணை மருத்துவக்கல்லூரி சார்பில் குடும்ப மருத்துவ சர்வதேச மாநாடு

 எ.வ.வே.கம்பன்

திருவண்ணாமலை அருணை மருத்துவமனை மருத்துவக்கல்லூரி சார்பாக குடும்ப மருத்துவம் பற்றிய சர்வதேச மாநாடு நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இது குறித்து கல்லூரி மருத்துவ இயக்குநர் மரு எ.வ.வே.கம்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. அருணை மருத்துவமனை மருத்துவக்கல்லூரி சார்பாக குடும்ப மருத்துவம் பற்றிய சர்வதேச மாநாடு நாளை தொடங்குகிறது. இதில் இசிஜி, சக்கரைநோய், ஆஸ்துமா, எளிதான எடைக்குறைப்பு, ஆராய்ச்சி முறை நடத்துதல் மற்றும் பிஎல்எஸ் அவசர சிகிச்சை நின்று போன இதயத்தை துடிக்க வைப்பது போன்ற செயல்முறை பயிற்சி நடைபெற உள்ளது.

இதில் இருதய நோய் நிபுணர் மரு சென்னியப்பன் திருச்சி, சக்கரை நோய் வல்லுநர் மரு பன்னீர்செல்வம் சென்னை, தங்கக்குணம் வேலூர் சி.எம்.சி வல்லுநர் மரு பாலமுகேஷ், மரு குணசிங் முதல்வர் அருணை மருத்துவக்கல்லூரி எடைக்குறைப்பு பயிற்சியாளர், மரு பாலாஜிசமூக நல மருத்துவர், மரு குமரேசன் அவசர சிகிச்சை வல்லுநர் மற்றும் பல வல்லுநர்கள் தங்களுடைய பங்களிப்பை பகிர்ந்து கொள்ள உள்ளனர். சுமார் 600க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் மற்றும் மேற்படிப்பு மருத்துவ மாணவர்களும், இளங்கலை மருத்துவ மாணவர்களும் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளாக ஞாயிற்றுக்கிழமை மரு. ஜெயராம் லிங்கமநாயக்கர் இருதய சிகிச்சை வல்லுநர், சிங்கப்பூர் மரு முகமத் ரேலா கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வல்லுநர், சென்னை மரு சந்திரசேகர் இறப்பைகுடல் மருத்துவர், சென்னை மரு மணி புற்றுநோயியல் அறுவை சிகிச்சை வல்லுநர் சென்னை மற்றும் இதர பல துறைகளில் தேர்ந்த வல்லுநர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர். மேலும் அதி நவீன சிகிச்சை முறை பற்றி வல்லுனர்கள் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொள்கின்றனர் என அருணை மருத்துவமனை சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் எனவும் இதில் சுமார் 600க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் மற்றும் மேற்படிப்பு மருத்துவ மாணவர்களும், இளங்கலை மருத்துவ மாணவர்களும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். நமது அருணை மருத்துவமனையின் சிறப்பம்சங்கள் 1.900 படுக்கைகள் கொண்ட அதி நவீன மருத்துவமனை, 8 அறுவை சிகிச்சை அரங்குகள், 4 தீவிர சிகிச்சை அரங்குகள், மாவட்டத்திலே முதல் இருதய அறுவை சிகிச்சை மையம், 6 மகப்பேறு மருத்துவஅறுவை சிகிச்சை கூடங்கள். மாவட்டத்திலே சிறப்பான இரத்த சுத்திகரிப்பு மையம், நுண்துளை மூட்டு அறுவை சிகிச்சைகூடம். அதி நவீன கண் அறுவை சிகிச்சை கூடம், நுண்துளை அறுவை சிகிச்சை, நவீன முறையில் பல் அறுவை சிகிச்சை மையம், மாவட்டத்திலேயே அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட இருதய நோய் மற்றும் ஆஞ்சியோகிராம் வசதி கொண்ட அருணை மருத்துவமனை, மாவட்டத்திலேயே மிக குறைந்த கட்டணத்தில் சிடி, எம்ஆர்ஐ வசதிகள் உள்ளது. விழாவினை முதன்மை செயலாளர் பொதுப் பணித்துறை மரு சந்திரமோகன் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார். மற்றும் அருணை மருத்துவமனை மருத்துவக்கல்லூரியின் துணைத்தலைவர் .எ.வ.குமரன், மருத்துவ இயக்குனர்.எ.வ.வே.கம்பன், கல்லூரியின் முதல்வர் டாக்டர் மரு குணசிங், மருத்துவக் கண்காணிப்பாளர் மரு குப்புராஜ் விழாவினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து உள்ளனர் என தெரிவித்தார்.

Tags

Next Story