சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

விருதுநகரில் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் வாகன பிரச்சார விழிப்புணர்வு பேரணி மற்றும் 100 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள் கலந்து கொண்ட மனித சங்கிலி பேரணி, கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.

ஆண்டு தோறும் ஜூன் 12-ம் தேதி சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினுள் மாவட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் வேர்ல்டு விஷன் இந்தியா இணைந்து பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட மனித சங்கிலி மூலம் குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டார்.

அதைத் தொடர்ந்து குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது குறித்த உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் கூற பள்ளி மாணவ மாணவிகள் ஏற்றுக்கொண்டனர் மேலும் குழந்தை தொழிலாளர் தடுப்பு குறித்த துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டு குழந்தை தொழிலாளர் முறையை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தின் பயணத்தை கொடியை சேர்த்து தொடங்கி வைத்தார் இந்த வாகனம் மாவட்டம் முழுவதும் பல்வேறு கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது. அது தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கையெழுத்து இயக்கத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

Tags

Next Story