நாகர்கோவிலில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா
கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அனைத்து அரசு ஊழியர் நல சங்கம் சார்பில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா நாகர்கோவில் அரசு ஊழியர் சங்க கட்டத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது, மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர் முகாம்கள் முறையாக நடைபெற்று வருகிறது. குறைகள் தெரிந்தால் அவர்களுக்கு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அண்மையில் நடத்தி முடிக்கப்பட்ட மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனுக்கள் பெறப்பட்டன. அதில் மாற்றுத்திறனாளிகள் கருவிகள் கேட்டு விண்ணப்பங்களை அளித்தனர். அவர்களுக்கு உடனுக்குடன் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டன. மாற்றுத்திறனாளிக்கான அனைத்து தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று பேசினார். தொடர்ந்து நல உதவிகள் வழங்கினார். கூட்டத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பிரின்ஸ் பயஸ், நாகர்கோவில் ஆர்டிஓ சேதுராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.