கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் சர்வதேச யோகா தினம்

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் சர்வதேச யோகா தினம்

யோகா தினம்

சென்னையிலுள்ள மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் சாா்பில் கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபத்தில் யோகாதினம் கொண்டாட்டப்பட்டது.

சென்னையிலுள்ள மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் சாா்பில் கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபத்தில் சா்வதேச யோகா தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. சென்னை மத்திய சித்த ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை இயக்குநா் என்.ஜே. முத்துக்குமாா் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தாா். சித்த மருத்துவ குழும ஆராய்ச்சி அலுவலா் எஸ்.செல்வராஜன் (சித்தா) வரவேற்றாா்.

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா பள்ளி மாணவா்கள் மற்றும் முஞ்சிறை ஏ.டி.எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரி, குலசேகரம் மரியா சித்த மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளின் மாணவா்- மாணவிகள் விழாவில் பங்கேற்றனா். இதில், யோகாசனம், சூரிய நமஸ்காரம், பிரணாயாமம் ஆகியவற்றின் செயல்விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

இந்நிகழ்வின்போது, ஜம்மு காஷ்மீரில் பிரதமா் பங்கேற்ற யோகா தின விழா நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. விவேகானந்த கேந்திர சித்த மருத்துவா் வி.கணபதி சிறப்புரையாற்றினாா். சித்தா மருத்துவ ஆராய்ச்சி அலுவலா் யூஜின் வில்சன் நன்றி கூறினாா்.

Tags

Next Story