அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் சர்வதேச யோகா தினம்

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் சர்வதேச யோகா தினம்

விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.


விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நாட்டு நலப்பணித்திட்டம், இந்திய யோகா சங்கம் இணைந்து யோகாவின் முக்கியத்துவம் மற்றும் அன்றாட வாழ்வில் உடல் நல ஆரோக்கியத்தில் யோகாவின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி வளாகத்தில் யோகா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக யோகா பயிற்றுவிப்பாளரும், சேலம் ஷர்த்திகா ஒருங்கிணைந்த மருத்துவ மைய நிர்வாக இயக்குனருமான பார்த்திபன் கலந்து கொண்டு பல்வேறு யோகாசன முறைகளை பயிற்றுவித்ததுடன், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் விளக்கி கூறினார். தொடர்ந்து துறை மாணவர்களின் யோகாசன நிகழ்வு நடத்தப்பட்டது.

மாணவர்கள் ஒன்றிணைந்து யோகா சின்னத்தை கல்லூரி வளாகத்தில் ஏற்படுத்தினர். சேலம் ேபாதிமரம் முதியோர் இல்லத்திலும் துறையின் மூலம் முதியோர்களுக்கு யோகாசன பயிற்சி வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை துறையின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசேகர், ஜெயபாலன், அல்போன்ஸ், உடற்பயிற்சி இயக்குனர்கள் ஜெயபாரதி, சூர்யா ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags

Next Story