சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு வழங்கிய ஆய்வாளர் ரெஜினா

ஐங்கரன் பெயித் கேர் மையம் மற்றும் யாதவர் கல்லூரி சார்பில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

போதைப்பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் நேற்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து போதை பொருள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள யாதவர் கல்லூரியில் ஐங்கரன் பெயித் கேர் மையம் மற்றும் யாதவர் கல்லூரி சார்பாக போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கல்லூரி செயலாளர் கண்ணன், ஐங்கரன் நிறுவனத்தின் நிறுவனர் எம் எஸ் ஐங்கரன்,கல்லூரி முதல்வர் ராஜு ஆகியோர் சிறப்புரையாற்றி பேரணியை தொடங்கி வைத்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருப்பாலை காவல் நிலைய ஆய்வாளர் ரெஜினா போதைப் பொருள் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து பேரணியில் என்சிசி மாணவர்கள் கல்லூரியில் இருந்து நத்தம் சாலை வழியாக சென்று பொது மக்களிடையே போதைக்கு எதிரான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார்கள்.

Tags

Next Story