ராசிபுரத்தில் சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

ராசிபுரத்தில் சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டவர்கள் 

ராசிபுரத்தில் சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் தினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சம்சித் எஸ்விபிஎம் இன்டர்நேஷனல் பள்ளி சார்பில் பேரணியை நடத்தியது. சம்சித் குரூப் ஆஃப் ஸ்கூல்களின் தலைவர் வாசா ஸ்ரீனிவாச ராவ், மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி இந்து சானு ஆகியோர் கலந்து கொண்டு தலைமை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சுமார் 100.க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர் பணியாளர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். பேரணி பள்ளியில் தொடங்கி, டி.வி.எஸ் சாலை மற்றும் முக்கிய சாலை வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்னர் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது. போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான ஒற்றுமையின் விளக்கம் அளிக்கும் வகையில் பதாகைகள் ஏந்தி மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக இந்த பேரணியை ராசிபுரம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கே.செல்வமணி ஆகியோர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

சம்சித் எஸ்.வி.பி.எம் இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர் டாக்டர். ஏ.மணிகண்டன் மற்றும் துணை முதல்வர் திருமதி உமா தேவி ஆகியோர் கலந்து கொண்டு, முழுமையான கல்வி மற்றும் சமுதாய நலனுக்காக பள்ளியின் அர்ப்பணிப்பை வலியுறுத்தி பேசினர்.

நாடு முழுவதும் 17க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் 14,000க்கும் அதிகமான மாணவர் அமைப்புடன் கல்வியில் சிறந்து விளங்கும் சம்சித் குரூப் ஆஃப் ஸ்கூல்ஸ், இளைஞர்களிடையே சமூக விழிப்புணர்வையும் பொறுப்பையும் ஊக்குவிக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து வழிநடத்தி வருகிறது. என பலர் பாராட்டினர்.

Tags

Next Story