மதுரையில் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் சதுரங்க போட்டி!
போட்டியில் பங்கேற்றவர்கள்
தென் தமிழகத்தில் முதல் முறையாக மதுரையில் செஸ் திருவிழா; 3 வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் சதுரங்க போட்டிகள் போட்டி தனியார் பொறியியல் கல்லூரியில் துவங்கியது மதுரை தனியார் கல்வி குழுமத்தின் சார்பில் தனியார் பொறியியல் கல்லூரியில் மதுரை சதுரங்க திருவிழா வரும் டிசம்பர் 23ஆம் தேதி முதல் 30 ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறுகிறது.
மூன்றாவது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் சதுரங்க போட்டிகள் கடந்த 23ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை ஏ,பி,சி, என மூன்று பிரிவுகளில் நடைபெறுகிறது. "ஏ" பிரிவில் நடைபெறும் சதுரங்க போட்டிகளில் ரஷ்யா, இங்கிலாந்து , பிரான்ஸ், அமெரிக்கா, நியூசிலாந்து, பெலாரஸ், வியாட்னாம், ஸ்ரீலங்கா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 33 முதல் தர வீரர்கள் பங்கு பெறுகின்றனர்.
ஏ பிரிவில் முதல் பரிசாக சாம்பியன் விருது பெறுபவருக்கு இருபது லட்சம் ரூபாய், பரிசு கோப்பை உள்பட ஒரு பைக்கும் வழங்கப்படுகிறது. இதேபோல் "பி" பிரிவில் 1700 புள்ளிகள் பெற்று உள்ள சதுரங்க விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் போட்டிகளும்.
இதில் வெற்றி பெறும் "பி" பிரிவு வீரருக்கு 2 லட்சம் ரூபாய் முதல் பரிசும் ஒரு பைக்கும் வழங்கப்படுகிறது. இதே போல் "சி" பிரிவில் 1500 புள்ளிகள் பெற்ற வீரர்கள் பங்கு பெறும் சதுரங்க வீரர்களுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் பணமாகவும்,பைக் ஒன்றும் வழங்கப்படுகிறது.
தனித்துவமாக விளையாடும் வீரர்களுக்கு என ஐந்து பைக்குகளும் மொத்தம் எட்டு பைக்குகள் மற்றும் 100 சைக்கிள்கள் வழங்கப்படுகிறது. முதல் பரிசுகள் தவிர பங்கேற்கும் சதுரங்க வீரர்களுக்கு ரூபாய் 40 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படுகிறது.
முத்துராமலிங்கம் சதுரங்க கோப்பைக்கான போட்டிகள் வரும் 23ம் தேதி முதல் வரும் 28ம் தேதி வரை பொறியியல் கல்லூரியில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெறுகிறது. நாளை காலை 9 மணிக்கு துவங்கும் 3வது சர்வ தேச சதுரங்க போட்டிக்கு கணினி மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது செய்யப்படுகிறது. தற்போது இதுவரை 1600 பேர் இளைஞர்கள்தான் கணினி வழியாக முன்பதிவு செய்துள்ளனர்.