பன்னாட்டு அறிவியல் கருத்தரங்கம் தூய வளனார் கல்லூரியில் நடைபெற்றது

பன்னாட்டு அறிவியல் கருத்தரங்கம் தூய  வளனார் கல்லூரியில் நடைபெற்றது

பன்னாட்டு அறிவியல் கருத்தரங்கம் தூய வளனார் கல்லூரியில் நடைபெற்றது

மாணவர்கள் ஆர்மமுடன் பங்கேற்று வருகின்றனர்

திருச்சி தூய வளனார் கல்லூரி இயற்பியல் துறையும் , இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றமும் இணைந்து “மேம்பட்ட பொருட்கள்” என்ற தலைப்பில் நடத்தும் பன்னாட்டு கருத்தரங்கம் இரண்டு நாட்கள் திருச்சி தூய வளனார் கல்லூரியில் இன்று துவங்கியது இந்த கருத்தரங்கில் இத்தாலி நாட்டின் தேசிய ஆராய்ச்சி மன்றத்தின் விஞ்ஞானி டாக்டர் ஃப்ராங்கா ஆல்பெர்த்தினி, இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் உலோகவியல் ஆய்வகத்தின் ஆராய்ச்சி இயக்குநரும் விஞ்ஞானியுமான டாக்டர் பாலமுரளி கிருஷ்னன், பிரெஞ்சு நாட்டின் ஜீன் லாமர் ஆய்வகத்தின் விஞ்ஞானி டாக்டர் வின்சென்ட் ஃபோர்னி, ஆகியோர் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இயற்பியல் துறைத் தலைவர் டாக்டர். ஜான்சன் வரவேற்றார்.

கல்லூரியின் அதிபர் டாக்டர் பவுல்ராஜ் மைக்கேல், செயலர் டாக்டர் அமல் மற்றும் முதல்வர் டாக்டர் சேவியர் ஆரோக்கியசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். டாக்டர் பாலமுரளி கிருஷ்னன் “மேம்பட்ட பொருட்களின் சவால்களும், வாய்ப்புகளும்” என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். அவர் தனது உரையில், மனிதகுல வரலாற்றில், பல்வேறு காலகட்டங்களில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை அவற்றின் பண்புகளை கொண்டு வகைபடுத்தி விளக்கினார். மேலும், வரும் காலங்களில் பண்பேற்றம் பெற்ற பொருட்கள் முக்கியத்துவம் பெறும் என்றும் குறிப்பிட்டார். டாக்டர் ஃப்ராங்கா ஆல்பெர்த்தினி மருத்துவம், உயிரியல் மற்றும் ஆற்றல் பயன்பாடுகளுக்கான காந்தபொருட்கள் பற்றி உரையாற்றினார். டாக்டர் வின்சென்ட் ஃபோர்னி உயர் வெப்பநிலைகளில் காந்த ஆற்றல் கொண்ட உலோகக் கலவைகள் பற்றி உரையாற்றினார். ஆராய்ச்சியாளர்கள் பலரும் கலந்துகொண்டு, சமர்பித்த ஆய்வுசுருக்க கையேடு நூலாக வெளியிடப்பட்டது.

Tags

Next Story