தமிழ் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு கருத்தரங்கம்
கருத்தரங்கத்தில் கலந்து கொண்டவர்கள்
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறையும், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் சுற்றுச்சூழல் துறையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டதன் அடிப்படையில், இரு நிறுவனங்களும் இணைந்து '2030-ஆம் ஆண்டை நோக்கிய நிலையான வளர்ச்சி' என்றத் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் மார்ச்.5,6 7 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது.
துவக்க விழா, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் துவக்கி வைத்தார். தொடர்ந்து இரு நாட்கள் தொழிற்நுட்ப அமர்வுகள் அங்கு நடைபெற்றது. கருத்தரங்கின் தொடர்ச்சியாக, மூன்றாவது நாள் தமிழ்ப் பல்கலைக்கழத்தில் தொடக்க நிகழ்வில் அறிவியல் புலத்தலைவர் முனைவர் ரெ.நீலகண்டன் தலைமை வகித்தார்.
பிஷப் ஹீபர் கல்லூரியின் துணை முதல்வர் பேரா.அ.அழகப்ப மோசஸ் துவக்கவுரையாற்றினார். இணைப் பேராசிரியர் ச.ரவிச்சந்திரன் வாழ்த்திப் பேசினார். பெரியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கே.முருகேசன் சிறப்புரையாற்றினார் தொழிற்நுட்ப அமர்வுகள் தொடர்ந்து நடைபெற்றது. இந்நிகழ்வில், இரு நிறுவனங்களின் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் என 100 பேர் பங்கு பெற்றனர். நிறைவு விழாவில் இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் கு.க.கவிதா வரவேற்றார். ஆகாஷ் ப்ளண்டஷன்ஸ் நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி சி.ரவீந்தர் சிங் சிறப்புரையாற்றினார்.
தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் சி.தியாகராஜன் நிறைவுரையாற்றி பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். நிறைவாக கருத்தரங்கச் செயலாளர் த.ராகேஷ் சர்மா நன்றி கூறினார்.