செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்த பன்னாட்டு கருத்தரங்கம்

செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்த பன்னாட்டு கருத்தரங்கம்

செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்த பன்னாட்டு கருத்தரங்கம்


திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) மற்றும் டாக்கா சர்வதேச பல்கலைக்கழகம் ஆகியோர் இணைந்து நடத்திய செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைப்பெற்றது . இந்த கருத்தரங்கத்தில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு எவ்வாறு பொறியியல் , வணிகம், சட்டம், கற்றல் மற்றும் கற்பித்தல், தொழில்துறை ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது என்பதை குறித்து பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த பன்னாட்டுக் கருத்தரங்கத்தை விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் துணை தலைவர் டாக்டர் கிருபாநிதி கருணாநிதி அவர்கள் துவங்கி வைத்தது பேசினார்.இதில்16 நாடுகள் பங்கேற்றன மேலும் 43ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடபட்டன, 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இக் கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் இயக்குநர் டாக்டர் நிவேதனா கிருபாநிதி, விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் திருமதி பேபிஷகிலா, வணிகவியல் துறை இயக்குநர் சசிகுமார் மற்றும் துறைதலைவர் முனைவர் சங்கர், முனைவர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பயணம், போக்குவரத்து, விநியோகச் சங்கிலி, தரக்கட்டுப்பாடு, மருத்துவ இயந்திரங்கள் ஆகியவற்றில் AI -யின் முக்கியத்துவம் பற்றி விவாதிக்கப்பட்டது.

அனைத்து பகுதிகளிலும் செயற்கை நுண்ணறிவு கருவிகளுக்கான பெரும் தேவை பற்றி மன்றத்தில் விளக்கப்பட்டது காகித விளக்கக்காட்சி நான்கு இணை அரங்குகளில் நடைப்பெற்றது.இந்த வருடாந்திர கருத்தரங்கம் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக நடைப்பெற்றது. கருத்தரங்கத்தில் பங்களாதேஷ் நாடாளுமன்ற உறுப்பினரும் டாக்கா சர்வதேச பல்கலைக்கழகத்தின் தலைவருமான பாரிஸ்டர் ஷாமீன் ஹைதர் சர்க்கார், துணைவேந்தர் பேராசிரியர் சைபுல் இஸ்லாம் மற்றும் DIU -யின் IQAC ஓருங்கிணைப்பாளர்பேராசிரியர் எம்டி சிரஜுல் இஸ்லாம் ப்ரொதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Tags

Next Story