பாவை பொறியியல் கல்லூரியில் சர்வதேச அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு - ஐகேட்ஸ் - 2024

பாவை பொறியியல் கல்லூரியில் சர்வதேச அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு - ஐகேட்ஸ் - 2024

 ஐகேட்ஸ் - 2024

இராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களில் ‘அடாப்டிவ் டெக்னாலஜீஸ் ஆன் சஸ்டைனபிள் குரோத் 2024” (ஐகேட்ஸ்- 2024) என்ற தலைப்பில்; சர்வதேச தொழில்நுட்பக் கருத்தரங்கு நடைபெற்றது. விழாவிற்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் அவர்கள் தலைமை வகித்து விழாவினைத் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக இந்தியா மற்றும் பிரேசில்ரூபவ் பிலிப்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின்ரூபவ் ஆர்ரூயஅp;டி குழு தலைமை தியாகோ ஹென்றிகுயு டிலிமா அவர்கள் கலந்து கொண்டார். பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநர் (நிர்வாகம்) முனைவர்.கே.கே.இராமசாமி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் திருமதி.மங்கை நடராஜன் அவர்கள் குத்துவிளக்கேற்றி விழாவினைச் சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர் தியாகோ ஹென்றிகுயு டி லிமா அவர்கள் தம் சிறப்புரையில்ரூபவ் ‘பாவை பொறியியல் கல்லூரி, மாணவர்களின் தொழில்நுட்ப அறிவின் வளர்ச்சிக்காக இதுபோன்ற கருத்தரங்குகள் ஏற்பாடு செய்வது சிறப்பான விஷயமாகும். ஏனென்றால் நாளுக்கு நாள் அறிவியலும்ரூபவ் தொழில்நுட்பமும் இயற்கையோடு இயற்கையாக வளர்ந்து கொண்டேயிருக்கிறது. மேலும் தொழில்நுட்பம் ஆக்கம், அழிவு என்ற பகுதிகளைக் கொண்டுள்ளது. இதில் நாம் ஆக்கத்திற்காக மட்டும் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்த வேண்டும். மேலும் அது சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணமும் இருக்க வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் தொழில்நுட்பத்தின் தாக்கமும்ரூபவ் பயன்பாடும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

எனவே மாணவர்களாகிய நீங்கள் கற்கும் கல்வியை தெளிவுறக் கற்க வேண்டும். ஐரோப்பாரூபவ் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நல்ல வரவேற்பை பெற்று, பல்வேறு துறைகளில் பயன்படுகிறது. எப்படியெனில் மருத்துவமனைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் அடிப்படைத் தகவல்களை அறிந்து கொள்ளவும்ரூபவ் வழிகாட்டியாகவும் பயன்படுகிறது. மேலும் ஹெல்த்கேர்

துறையில் 60 சதவீதம் ஹேக்கிங் இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. எனவே சைபர் செக்யூரிட்டி மாணவர்களுக்கு இந்த துறையில் வாய்ப்புகள் அதிகம். மேலும் ஹெல்த் கேர் துறையில் செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்யூட்டிங், மிசின் லேர்னிங் தொழில்நுட்பங்கள் பயன்படுத்திய சாதனங்கள், உலகளவில் 900 பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இவைகளை கருத்தில் கொண்டு, நீங்கள் நன்கு உங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு ஆர்வமிருக்கும் துறையில், நீங்கள் சாதனையாளர்களாக திகழ்ந்துரூபவ் உங்களின் வளர்ச்சி மற்றவர்களின் வாழ்க்கையில் நல்மாற்றத்தை உருவாக்க வேண்டும். உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்” என்று பேசினார். முன்னதாக பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப்பரிசு மற்றும் பொன்னாடை வழங்கினார். சிறப்பு விருந்தினர் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் ஐகேட்ஸ் 2024 கருத்தரங்கின் நினைவு மலரை வெளியிட்டனர்.

பாவை பொறியியல் கல்லூரி உயிர் மருத்துவயியல் துறைத்தலைவர் முனைவர்.டி.அருண்குமார் ஐகேட்ஸ் 2024கருத்தரங்கைப் பற்றிய விளக்கங்களை எடுத்துரைத்தார். இந்த கருத்தரங்கில் முக்கிய உரைகளும்ரூபவ் சிறப்பு அழைப்பின் பேரில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆற்றும் உரைகளும்ரூபவ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள்ரூபவ் கருத்து பரிமாற்றங்களும் இடம்பெறுகின்றன. இந்த தொழில்நுட்ப கருத்தரங்கிற்கு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொறியியல் வல்லுனர்களிடமிருந்து சிறந்த வரவேற்பு காணப்படுகிறது. கணிப்பொறியியல், இயந்திரவியல், கட்டிடவியல், மின்னணுவியல், போன்ற பல துறைகளிலிருந்து ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப கட்டுரைகள் பரிசீலனைக்கு வந்திருந்தன. அவற்றில் 250 கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுரூபவ் ஆய்வுக்கட்டுரைகள் கருத்தரங்கில் எடுத்துரைக்கப்பட உள்ளன.

நிறைவாக பாவை பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் எம்.பிரேம்குமார் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநர் (நிர்வாகம்) முனைவர் கே.கே.இராமசாமி, இயக்குநர் (சேர்க்கை) கே.செந்தில், நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளர் எம்.மோகன், முதன்மையர்கள், நடுவர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story