உலக மகளிர் தினம் - சாதனை பெண்களுக்கு விருது
ஆண்களுக்கு நிகராக பெண்கள் இன்றைய சூழலில் எல்லா துறைகளிலும் சாதித்து வருகின்றனர். மேலும் சமூகசேவை, தொண்டு செய்தல் என அனைத்திலும் சிறந்து விளங்குகின்றனர். பெண்களின் பெருமையை உலகிற்கு எடுத்துரைத்து கெளரவிக்கும் வகையில் உலக மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடபட்டு வருகிறது.
அந்த வகையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மதுரை கருப்பாயூரணி பகுதியில் உள்ள தனியார் மஹாலில் ரோட்டரி கிளப் ஆப் மதுரை பிளாசம் சார்பாக நிர்லயா என்ற மகளிர்க்கான சிறப்பு நிகழ்ச்சி அறம் மாவட்டம் 300 மண்டல ஒருங்கிணைப்பாளர் முருகானந்த பாண்டி,அறம் மாவட்டம் 3000 உதவி ஆளுநர் ஸ்ரீ லட்சுமி பன்சிதர், ரோட்டரி கிளப் ஆப் மதுரை பிளாசம் தலைவர் கிருபாதியானேஷ்,செயலாளர் ரேவதி குமாரப்பன் பொருளாளர் அமுதா நடராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி இன்டர்நேஷனல் டைரக்டர் முருகானந்தம்,மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி,ரொட்டேரியன் ராஜாகோவிந்தசாமி, கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு பெண்களின் பெருமையை போற்றும் வகையில் சிறப்பித்தனர். மேலும் நிகழ்ச்சியில் தொடர்ந்து சிறப்பு குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு பள்ளி நடத்தி வரும் மதுரையை சேர்ந்த அருணா, அரசு பள்ளிக்கு பூர்வீக நிலத்தை தானமாக வழங்கிய பூரணம்மாள், மேலும் பல்வேறு துறைகளில் சாதித்து சிறந்து விளங்கிய மணிமேகலை தீபா பிரேமலதா உள்ளிட்ட பெண்களுக்கு ரோட்டரி கிளப் ஆப் மதுரை பிளாசம் சார்பாக நிர்லயா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் குலுக்கல் முறையில் பரிசு போட்டிகள் நடைபெற்றன.