கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சர்வதேச மகளிர் தின விழா

கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சர்வதேச மகளிர் தின விழா

மகளிர் தின விழா

கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி நீதித்துறை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த மகளிர் தின விழாவிற்கு மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி கீதாராணி தலைமை தாங்கினார். சார்பு நீதிபதி வீரண்ணன் முன்னிலை வகித்தார். கூடுதல் சார்பு நீதிபதி தனசேகரன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி முகமது அலி, முதலாவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுகந்தி வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் ராமசுவாமி வரவேற்றார். விழாவையொட்டி நீதித்துறையில் பணியாற்றும் பெண்கள் மற்றும் பெண் வழக்கறிஞர்களிடையே பல்வேறு கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நீதிபதி கீதாராணி பரிசுகள் வழங்கி பாராட்டினார். வழக்கறிஞர் சங்க செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.

Tags

Next Story