கவிதா’ஸ் கல்லூரியில் சர்வதேச பெண்கள் தின விழா

வையப்பமலை கவிதா’ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச பெண்கள் தின விழா

வையப்பமலை கவிதா’ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் மேம்பாட்டு மையம் சார்பாக சர்வதேச பெண்கள் தின விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் P.செந்தில்குமார் தலைமை தாங்கினார். கல்லூரியின் தலைவர் K.பழனியப்பன், துணைத்தலைவர் சரஸ்வதி அம்மாள் மற்றும் கல்லூரியின் செயலாளர் கவிதா செந்தில்குமார், முதல்வர் முனைவர். R விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக திருச்செங்கோடு கோழிக்கால்நத்தம் சுதா தேனீ வளர்ப்பு நிலைய உரிமையாளரும் தொழில் முனைவோருமான செல்வி வித்யாஸ்ரீ அவர்கள் கலந்து கொண்டார்.

முதலாமாண்டு முதுகலை ஆங்கில துறை மாணவி மதுபாலா வரவேற்றார். தாளாளர் P.செந்தில்குமார் அவர்கள் தமது உரையில், “பெண்கள் நம் நாட்டிலும் வீட்டிலும் தனது பங்களிப்பை தவறாது செய்ய மனதில் உறுதி கொள்ள வேண்டும்” என்று எடுத்துரைத்தார்.

கல்லூரி செயலாளர் கவிதா செந்தில்குமார் அவர்கள் “பெண்கள் நாட்டின் முதுகெலும்பாகவும், வீட்டிற்கும் நாட்டிற்கும் நம் சமுதாயத்திற்கும் சிறந்த வகையில் பணியாற்ற வேண்டியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தத்தம் உடல் நலத்தை பேணி பாதுகாக்கவும் வேண்டும்” என்று கூறி மாணவிகளை வாழ்த்தி பேசினார்.

கல்லூரி முதல்வர் முனைவர். R விஜயகுமார் “மாணவிகள் உடல் நலம் மன நலம், சமூக நலம் பேணி சிறந்த குடிமக்களாக விளங்க வேண்டும்” என வாழ்த்தி பேசினார்.

Tags

Next Story