நாகர்கோயிலில் உலக மகளிர் தின விழா

நாகர்கோயிலில் உலக மகளிர் தின விழா
மகளிர் தின விழாவில் சாதனை பெண்களுக்கு விருது
கன்னியாகுமரி மாவட்டம் , பைரவி பவுண்டேஷன் சார்பில் நாகர்கோவிலில் மகளிர் தின விழா வெகுவிமர்சையாக கொண்டாட்டப்பட்டது.

குமரி மாவட்டம் பைரவி பவுண்டேஷன் சார்பில், உலக மகளிர் தினம் நாகர்கோவில் வருவாய் துறை அலுவலர் சங்க கட்டிடத்தில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக பஞ்சாயத்து வாரியாக கிராமிய பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த குமரியை சேர்ந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது.

விழாவிற்கு பைரவி ஃபவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் ஷோபா தலைமை வகித்தார். அரசு சிறப்பு வழக்கறிஞர் லிவிங்ஸ்டன் சாதனை படைத்த பெண்களுக்கு விருது வழங்கினர். விழாவில பேராசிரியர் சுதாமதி, பரிதா பேகம், திருத்தமிழ் தேவனார், வேளாண் அலுவலர் ராஜ்குமார், தொழில் அதிபர் அர்னால்டு அரசு, ஆகியோர் பேசினர்.

விழாவில், காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்து வரும் எஸ் .ஐ ஜெசி மேனகா, வழக்கறிஞர் செண்பகவல்லி , டாக்டர் சரஸ்வதி, கிராம நிர்வாக அலுவலர் மேரி டயானா ராணி, பேரூராட்சி தலைவர்கள் விஜயலட்சுமி, அமுதா ராணி மற்றும் செல்ல பிராணிகள், வளர்ப்பு பெரிய பிராணிகள், வன் விலங்குகள் சிகிச்சை ஆகிய ஒவ்வொரு சிறப்பு பிரிவுகளில் திறன் பெற்ற கால்நடை மருத்துவர்கள் செந்தில் வேலா, பிரசன்னா, நந்தா தேவி மற்றும் சுய தொழில் மூலம் முன்னேறிய பெண்கள்,இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலாளர் ஷீபா நன்றி கூறினார்.

Tags

Next Story