பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் உலக மகளிர் தின விழா
பெரம்லூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கமும் இணைந்து பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் உலக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய பல்கீஸ் தலைமையில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் பேசிய முதன்மை மாவட்ட நீதிபதி, அனைத்து பெண் நீதிபதிகளுக்கும், நீதிமன்ற பெண் ஊழியர்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டார், மேலும் பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆண் ஊழியர்களை விட பெண் ஊழியர்களே மிகவும் அதிகமா இருக்கின்றனர் என்பது வரவேற்கதக்கது.
பெண்கள் வேலையில் சிறப்பாகவும் நேர்மையாகவும் திருப்திகரமாகவும் பணிபுரிய வேண்டும். ஒரு பெண் முன்னேறினால்தான் அந்த குடும்பம் முன்னேறும், அந்த குடும்பம் முன்னேறினால்தான் ஒரு சமுதாயம் முன்னேறும் எனவே பெண்கள் ஒரு குடும்பத்தை வழிநடத்தும் அளவிற்கு முன்னேற வேண்டும் என்றும் நமது நாட்டில் பெண் நீதிபதிகள் அதிக என்னிக்கையில் உள்ளதாகவும் அது போல் தங்களது குழந்தைகளையும் நல்ல முறையில் படிக்க வைத்து வழக்கறிஞராக்கி நீதிபதியாக தேர்வு பெறவேண்டும் என்று விழாவில் பேசினார்கள்.
இதில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மூர்த்தி, சார்பு நீதிபதிகள் அன்னாமலை மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளார் சந்திர சேகர் மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜமகேஷ்வர் ஆகியோர் பெண்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார்கள். மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மகாலெட்சுமி, குற்றவயியல் நீதித்துறை நடுவர்கள் சுப்புலட்சுமி, சங்கீதா சேகர். உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதிகள் கவிதா மனோகர, பர்வதராஜ ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள் கடந்த 1-ஆம் தேதி முதல் பெண் நீதிமன்ற ஊழியர்களுக்கு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட ஊழியர்களுக்கு நீதிபதிகள் அனைவரும் பரிசு வழங்கி பாராட்டுகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு நிதிமன்ற ஊழியர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டத்தின் தலைவர் சுப்ரமணியன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். முன்னதாக வருகை புரிந்த அனைவரையும் நீதிமன்ற ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் ஜார்ஜ் வரவேற்றார் மற்றும் பொருளாளர் செல்வி துனை செயலாளர் செல்வகுமார் உட்பட அனைத்து ஊழியர்களும் பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்களும் பலர் கலந்து கொண்டனர் இறுதியாக நீதிமன்ற பெண் ஊழியர்களின் சார்பாக கோகிலா நன்றி தெரிவித்தார்