பெரியார் மணியம்மை பல்கலை.,யில் உலக மகளிர் தின விழா

பெரியார் மணியம்மை பல்கலை.,யில் உலக மகளிர் தின விழா
உலக மகளிர் தின விழா
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) உலக மகளிர் தினம் மற்றும் அன்னை மணியம்மையாரின் 106 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மகளிருக்கு மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்று நோய்க்கான பரிசோதனை முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

புற்றுநோய் கண்டறிதல் சோதனையான மேமோகிராம் மற்றும் பேப்ஸ்மியர் எனப்படும் உயர்தர சோதனை முகாம் டாக்டர் விஸ்வநாதன் மருத்துவமனைகள் குழுமம் மற்றும் டாக்டர் சாந்தா புற்றுநோய் அறகட்டளை நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. எம்.ஆர்.மருத்துவமனை இயக்குநர், மருத்துவர் ராதிகா மைகேல் மற்றும் வல்லம் பேரூராட்சி மன்ற தலைவர் க.செல்வராணி ஆகியோர் நிகழ்வினை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவர் ராதிகா மைக்கேல், புற்றுநோய் தொற்றின் அறிகுறிகள் சுயபரிசோதனை முறைகள், பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பற்றி விளக்கமாக கூறினார். இந்நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழக பதிவாளர் பேரா பி.கே.ஸ்ரீவித்யா முன்னிலை வகித்தார். மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை தலைவர் முனைவர் ச.நர்மதா நன்றி கூறினார். வீரமணி மோகனா வாழ்வியல் ஆய்வு மய்ய இயக்குனர் முனைவர் அ.அசோக்குமார் நிகழ்வினை தொகுத்து ஒருங்கிணைத்தார்.

Tags

Next Story