மாதர் இயக்கங்களின் கூட்டுக் குழு சார்பில் சர்வதேச மகளிர் தின விழா

மாதர் இயக்கங்களின் கூட்டுக் குழு சார்பில் சர்வதேச மகளிர் தின விழா
மாதர் இயக்கங்கள் சார்பில் நாகர்கோவிலில் பொதுக் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்டம், மாதர் இயக்கங்களின் கூட்டுக் குழு சார்பில் சர்வதேச மகளிர் தின விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட மாதர் இயக்கங்களின் கூட்டுக் குழு சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு சர்வதேச மகளிர் தின பொதுக்கூட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது. விழாவிற்கு பேபி லதா தலைமை வகித்தார். சுஜா ஜாஸ்மின் வரவேற்றார். உஷா அறிமுக உரை நிகழ்த்தினார். சுகந்தி சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கூட்டத்தில் இயற்கை வளமிக்க குமரியில் மலைகளை அழிப்பதால் பல்லுயிர் பூங்கா அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குமரி கனிம வள கொள்ளைகளை கண்டித்தும், மத வழிபாட்டுத் தலங்களில் அரசியல் புகுத்துவதை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மகளிர் காவல் நிலையங்களில் போதுமான காவலர்கள் நியமிக்க வேண்டும், குடும்ப நல நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்கள் நிரப்ப வேண்டும், அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரிய குளறுபடிகளை சரி செய்து அனைவருக்கும் தாமதம் இன்றி சலுகைகள் வழங்கப்பட வேண்டும், போதை பொருட்களை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் முன்னதாக பார்வதிபுரத்தில் இருந்து வெட்டூர்ணிமடம், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி, மணிமேடை சந்திப்பு வழியாக அண்ணா விளையாட்டு அரங்கம் வரை பேரணி நடைபெற்றது.

Tags

Next Story