நாகை சமூகநலத்துறை சார்பாக சர்வதேச மகளிர் தின விழா

நாகை சமூகநலத்துறை சார்பாக சர்வதேச மகளிர் தின விழா

மகளிர் தின கொண்டாட்டம்

நாகப்பட்டினம் மாவட்டம், மாவட்ட சமூகநலத்துறை சார்பாக சர்வதேச மகளிர் தின விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம், மாவட்ட சமூகநலத்துறை சார்பாக சர்வதேச மகளிர் தின விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு அவ்விழாவின் துவக்கமாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானிடாம் வர்கீல் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் உறுதிமொழி ஏற்பு, சர்வதேச மகளிர் தின விழாவை கொண்டாடும் வகையில் பலூன் பறக்கவிடப்பட்டது.

தேர்தல் மற்றும் மகளிர் தின விழா Selfie Point, கண்காட்சி அரங்கம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, பெண்களுக்கான சானிட்டரி நாப்கின் விற்பனை இயந்திரத்தினை மருத்துவ கல்லூரி மருத்துவமனை அரசு மகளிர் கலைக் கல்லூரி மற்றும் மாவட்ட ஆட்சியரக வளாக பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

மேலும், மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக சத்தியவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரம் 100 பயனாளிகளுக்கும், நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது. தனியார் மகளிர் கல்லுாரி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் இறுதியாக விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர்ரா.பேபி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர.ரஞ்ஜீத்சிங்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது).இராமன், மாவட்ட சமூகநல அலுவலர் .கி.திவ்வியபிரபா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் எழிலரசி, மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story