சர்வதேச மகளிர் தின விழா: நடனமாடி மகிழ்ந்த ஆட்சியர் !
ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களின் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் அரசியல் சார்ந்த பங்களிப்புகளுக்கு அங்கீகாரமும் மரியாதையும் கொடுக்கும் விதமாக உலகம் முழுவதும் இந்த நாள் மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மகளிர் தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்தன. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சர்வதேச மகளிர் தினம் மாவட்ட மகிளிர் திட்ட துறை மூலம் கொண்டாடப்பட்டது. சுற்றுலா பயணிகள் முன்னிலையில் மகளிருக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருணா கலந்து கொண்டார். கல்லூரி மாணவிகள், அரசு துறைகளில் பணிபுரியும் பெண்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என அனைவரும் உற்சாகத்துடன் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு ஆடி பாடி மகிழ்ந்தனர். குறிப்பாக படுகு மொழி பாடலுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி, மாவட்ட ஆட்சியர் அருணா என அனைவரும் நடனமாடி மகிழ்ந்தனர். இறுதியாக மாவட்ட அளவில் பொறுப்பில் உள்ள பெண் அலுவலர்களுக்கு "இன்ஸ்பைரிங் உமன் ஆஃப் நீல்கிரிஸ்" என்ற பட்டமும் கிரீடமும் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.