வேலூர் பேரூராட்சியில் உலக மகளிர் தினம் - தூய்மை பணியாளர்களுக்கு பரிசு

X
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வேலூர் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பேரூராட்சி தலைவர் லட்சுமி முரளி பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வேலூர் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பேரூராட்சி தலைவர் லட்சுமி முரளி பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
வேலூர் பேரூராட்சியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை பாராட்டி பரிசுகள் வழங்கி மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு பேரூராட்சி தலைவர் லட்சுமி முரளி தலைமை வகித்து தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்து அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறினார். அதனைத் தொடர்ந்து பேரூராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை பெண் பணியாளர்கள், அலுவலகத்தில் பணியாற்றும் பெண் பணியாளர்கள் அனைவரும் மகளிர் தின விழா கொண்டாடினர். இதில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
