உலக மகளிர் தினம் - பென்சில் கார்பனில் பெண்களின் சிற்பம்
பென்சிலில் பெண் சிற்பம்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு போடியை சேர்ந்த சிற்ப கலைஞர் பென்சில் கார்பனில் பெண்களின் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.
போடி ஜக்கமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமாா் (27). இவா் சிற்பக்கலை பயின்று பல்வேறு நுண்ணிய பொருள்களில் சிற்பங்களை செய்து வருகிறார். மார்ச்.8 இல் உலக மகளிா் தினம் கொண்டாடப்படுவதையொட்டி பென்சிலின் கார்பன் நுனியில் பெண்களின் சிற்பத்தை அவர் செதுக்கினாா். 0.3 செ.மீ. அகலம், 1.4 செ.மீ. உயரம் கொண்ட இந்தச் சிற்பங்களை 1.30 மணி நேரத்தில் வடிவமைத்துள்ளார்.
Next Story