சர்வதேச யோகா போட்டி; கும்மிடி மாணவர்கள் அசத்தல்

சர்வதேச யோகா போட்டி; கும்மிடி மாணவர்கள் அசத்தல்

 துபாயில் நடந்த சர்வதேச அளவிலான யோகாசன போட்டியில், கும்மிடிப்பூண்டியில் சேர்ந்த மாணவர்கள் அசத்தினர்.

துபாயில் நடந்த சர்வதேச அளவிலான யோகாசன போட்டியில், கும்மிடிப்பூண்டியில் சேர்ந்த மாணவர்கள் அசத்தினர்.

துபாய் நகரில், இம்மாதம், 12 மற்றும் 13ம் தேதிகளில், 10வது சர்வதேச அளவிலான யோகாசன போட்டிகள் நடந்தன.

எஸ்.ஜி.எஸ்., இன்டர்நேஷனல் யோகா பவுண்டேஷன், துபாய் ஜெயின் அறிவுசார் அமைப்பு, உலக யோகாசன அமைப்பு இணைந்து நடத்திய போட்டிகளில், இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், சிங்கப்பூர், மலேஷியா, ஹாங்காங், ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட, 20 நாடுகளில் இருந்து, 400க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

கும்மிடிப்பூண்டி ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த, 18 பேர் இந்தியா சார்பில் பங்கேற்ற அணியில் இடம் பெற்றிருந்தனர். பயிற்சியாளர் சந்தியா, மாணவர்கள் லக் ஷயா, மைத்ரா, ஹேமஸ்ரீ, மகிழவன், யுவன் ஆகிய ஆறு பேர் தங்கம் வென்றனர். அதேபோன்று, பிரகதி, ஹரினிதா, ஜீவிகா, சஞ்சனா, அஸ்வின், பிரதீபன் ஆகியோர் வெள்ளி பதக்கங்களும், ஷம்ருதா, இந்துஸ்ரீ, நான்சி, திருசிவபூரணி, ஜோஷிகா, ஜோஷிதா ஆகியோர் வெண்கல பதக்கங்களும் வென்றனர். நேற்று காலை நாடு திரும்பிய அனைவருக்கும் .

Tags

Read MoreRead Less
Next Story