ராசிபுரம் வித்யா நிகேதன் பள்ளியில் சர்வதேச யோகா தினம்

ராசிபுரம் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

சர்வதேச யோகா தினம் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் யோகாசனம் செய்தனர். ராசிபுரம் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் மாணவ மாணவிகள் அனைவரும் ஒன்றிணைந்து யோகா என்ற வடிவில் அமர்ந்து பயிற்சி செய்து அசத்தல். நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10.ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வெகு சிறப்பாக யோகா பயிற்சி நடைபெற்றது. யோகா பயிற்சியாளர் திருமதி. பிரியா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் யோகாசனம் செய்யப்பட்டது. யோகா தினத்தின் சிறப்புகளைப் பற்றி பள்ளி மாணவர்கள் சிறப்புரையாற்றினர்.

இதில் 100 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். மாணவ மாணவிகள் அனைவரும் ஒன்றிணைந்து யோகா என்ற வடிவில் அமர்ந்து பயிற்சி மேற்கொண்டனர். மேலும் மாணவர்களுக்கு அதிக அளவில் பயன்படக் கூடிய நின்றபதாசனா, சூரியநமஸ்காரம், வீரபத்ரயாசனா, வஜ்ராசனா, பத்மாசனா. உத்ராசனா ஆகிய பயிற்சிகளை மாணவர்கள் ஒருங்கிணைந்து செய்து காட்டினர். யோகா என்பது பஞ்சபூதங்கள் என்றும் அவை நம் உடலில் உள்ளது என்றும் யோகா பயிற்சி செய்வதால் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. அதிக இரத்த ஓட்டமும், நினைவாற்றலும் கிடைக்கிறது. மனதை வலிமைப்படுத்துகிறது.

சோம்பலையும் மன அழுத்தத்தையும் நீக்குகிறது. ஆயுட்காலம் நீடிக்கிறது என்று யோகா பயிற்சியாளர் மாணவர்களுக்கு விளக்கமளித்தனர். இந்த யோகாசனம் பயிற்சியில் பள்ளி இயக்குநர்கள், மற்றும் முதல்வர் திருமதி. T. சித்ரா ஆசிரிய, ஆசிரியைகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதே போல் ராசிபுரத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகள் யோகாசனம் செய்தனர்.

Tags

Next Story