சர்வதேச யோகா தின விழிப்புணர்வு

சர்வதேச யோகா தின விழிப்புணர்வு

யோகா பயிற்சி

பாபநாசம் விவேகானந்தா சமூக கல்வி சங்கம் சார்பில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு யோகா பயிற்சி வழங்கப்பட்டது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பாபநாசம் விவேகானந்தா சமூக கல்வி சங்கம் சார்பில் யோகா விழிப்புணர்வு பயிற்சி சங்க வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விவேகானந்தா கல்வி சங்க தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். செயலாளர் தங்க.கண்ணதாசன் முன்னிலை வகித்து யோகா செய்வதன் அவசியம் குறித்தும் சாதாரணமாக என்ன வகையான யோகா செய்யலாம் அதனால் உண்டாகும் பயன்கள் குறித்து விரிவாக எடுத்துக் கூறி பயிற்சி அளித்தார்.

மேலும் சங்கம் சார்பில் கிராமங்களில் மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு களப் பணியாளர்கள் மூலம யோகா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது உள்ளிட்ட சங்க சேவைகள் பற்றி எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள், சங்க களப்பணியாளர்கள், தையல் பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். நிறைவாக நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார் நன்றி கூறினார்.

Tags

Next Story