இணையதள விழிப்புணர்வு பேரணி
இணையதள விழிப்புணர்வு பேரணி
எஸ்பி தொடங்கிவைத்த விழிப்புணர்வு பேரணி
அரியலூர் மாவட்ட சைபர்க்ரைம் காவல் துறை சார்பில் இணையதள சேவையை பொதுமக்கள் கவனமாக கையாள்வது குறித்த விழிப்புணர்வு பேரணி அரியலூர் பேருந்து நிலையம் அருகே இன்று நடைப்பெற்றது. இதனை மாவட்ட எஸ்பி செல்வராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் இணையதளத்தை கவனமாக கையாள வேண்டும் எனவும், அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து வரும் லிங்குகளை ஓபன் செய்யக்கூடாது எனவும், வங்கி கணக்கு எண், OTP எண் உள்ளிட்டவைகளை யாருக்கும் சொல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. அரியலூர் பேருந்து நிலையத்தில் தொடங்கிய இப்பேரணி செந்துறை சாலை, இருசுக்குட்டை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு கலைக்கல்லூரியில் நிறைவடைந்தது. இதில் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் காவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story