சிலம்பத்தில் தங்கப்பதக்கம் வாங்கிய மாணவி பேட்டி !!

சிலம்பத்தில் தங்கப்பதக்கம் வாங்கிய மாணவி பேட்டி !!

தங்கப்பதக்கம்

சிலம்பத்தில் தங்கப்பதக்கம் வாங்கிய மாணவி கல்பாக்கத்தில் பேட்டி அளித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் நகரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ஆரோக்கியராஜ் கல்பாக்கம் (சிஐஎஸ்எப்) மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணிபுரியும் இவரது மகள் ஏஞ்சலின் அணு ஆற்றல் மத்திய பள்ளியில் பத்தாம் வகுப்பு பயில்கிறார். சிறு வயது முதலே சிலம்பம் மீதும் தமிழ் மொழி மீதும் அளவில்லா பற்று கொண்டவராக திகழ்ந்தார் அதனால் சிறு வயது முதல் சிலம்பம் கற்று வந்தார்.

இதற்கிடையில் பள்ளியின் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் போதிதர்மா சிலம்ப வகுப்பில் சேர்ந்து சிலம்பத்தில் படிப்படியாக தேறினார். சிலம்பத்தில் நன்கு தேர்ந்த ஏஞ்சலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவாவில் நடைபெற்ற சிலம்பம் இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டார்.

பல அணிகள் பங்கேற்ற போட்டியில் நீல கம்பு சுற்றுதல், ஒற்றை நடுகம்பு சுற்று, கம்பு சண்டை, வால் வீச்சு உள்ளிட்ட போட்டியில் எதிரணியினரை வென்று தங்கப்பதக்கத்தை வென்றார் அதனை தொடர்ந்து இரண்டு வெள்ளி பதக்கங்களையும் வென்று தமிழகத்திற்கும் கல்பாக்கத்திற்கும் பெருமை சேர்த்தார்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாணவி ஏஞ்சலின் எனக்கு சிறுவயதில் இருந்தே சிலம்பம் மீது ஆர்வம் இருந்தது அதனை தொடர்ந்து போதிதர்மா வகுப்பில் சேர்ந்து தற்போது தங்கப்பதக்கம் வென்றுள்ளேன் மாணவ மாணவியர் அனைவரும் சிலம்ப பயிற்சி கற்றுகொள்ள வேண்டும் தற்காப்பு கலைகள் மாணவிகளை பாதுகாக்கும் ஆகவே பள்ளி கல்லூரி மாணவிகள் அனைவரும் தற்காப்பு கலையான சிலம்பத்தை கற்று கொள்ள வேண்டும் என்றார் தொடர்ந்து பேசியவர் எனக்கு தமிழ் மீது மிகுந்த ஆர்வம் இருந்ததால் 1330 திருக்குறளையும் மனப்பாடமாக ஒப்பிப்பேன் என்றார்.

இதற்கெல்லாம் எனக்கு ஊன்றுகோலாய் இருந்த அணு ஆற்றல் மத்திய பள்ளியின் பள்ளி முதல்வர், உடற்கல்வி ஆசிரியர் சக ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் பெற்றோர்களுக்கும் சிலம்பம் கற்றுக் கொடுத்த மாஸ்டர் உட்பட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார்.

Tags

Next Story