ஜீவனாம்சம் தராமல் மிரட்டல் - கணவன் உட்பட 4 பேர் மீது வழக்கு
காவல் நிலையம்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜகபர் நாச்சியார். இவருக்கும் கீழ்வேளூர் ரெட்ட மதகடி பகுதியை சேர்ந்த அப்துல் கரீம் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது .இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு விவாகரத்து கேட்டு இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலையில் வழக்கை விசாரித்த நாகை குற்றவியல் நீதிமன்றம் ஜகபர் நாச்சியாவிற்கு அப்துல் கரீம் மாத வாடகையாக 3 ஆயிரம் ஜீவனாம்சமாக 7000 என பத்தாயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் ஒரு மாதம் மட்டுமே நீதிமன்ற உத்தரவுப்படி 10 ஆயிரம் வழங்கிய அப்துல் கரீம் அதற்கு பின்பு வழங்கவில்லை இந்த நிலையில் ஜெகபர் நாச்சியார் வீட்டிற்கு வந்த அப்துல் கரீம் மற்றும் அந்த உறவினர்கள் நான்கு பேரும் சேர்ந்து உனக்கு இஸ்லாம் முறைப்படி தலாக் சொல்லி விட்டதால் ஜீவனாம்சம் தர முடியாது எனக் கூறி மிரட்டல் விடுத்து விட்டு சென்றுள்ளனர் இது தொடர்பாக ஜகபர் நாச்சியார் கீழ்வேளூர் குற்றவியல் மற்றும் உரிமைகள் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கினை தொடர்ந்து வழக்கு விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய கீழ்வேளூர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின் படி கீழ்வேளூர் போலீசார் ஜகவர் நாச்சியார் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்