பெண் போலீஸ் ஏட்டுக்கு மிரட்டல் - கிராம நிர்வாக உதவியாளர் மீது வழக்கு
சுசீந்திரம் அருகே தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் ஏட்டிடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த கிராம நிர்வாக உதவியாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கொற்றிகோடு காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் பெண் போலீஸ் ஏட்டு சைமா. கடந்த 19ஆம் தேதி சுசீந்திரம் அருகே உள்ள ராமபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் பணியில் இருந்தார். அப்போது ராமபுரம் பகுதி ஆண்டார்குளத்தை சேர்ந்த தேரூர் கிராம நிர்வாக அதிகாரி அலுவலக உதவியாளரான பவுல் தம்பி (45) என்பவர் அங்கு பைக்கில் வந்துள்ளார்.
அப்போது வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் அப்பால்தான் வாகனங்களை நிறுத்த வேண்டும் வாக்குச்சாவடி அருகே நடத்தக்கூடாது என்ற சைமா கூறினார். அப்போது அவரிடம் பவுல் தம்பி ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சைமா அளித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் விசாரணை செய்து பவுல் தம்பி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story