இராசிபுரம் பேருந்து நிலையத்தில் போதையில் வாலிபர் ரகளை

இராசிபுரம் பேருந்து நிலையத்தில் போதையில் வாலிபர் ரகளை

போதையில் வாலிபர் ரகளை

இராசிபுரம் பேருந்து நிலையத்தில் போதையில் வாலிபர் ரகளையில் ஈடுபட்டார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சுமார் 20 வயதுடைய வாலிபர் ஒருவர் போதையில் (கஞ்சா போதை என தெரிகிறது) இந்நிலையில் பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டார். தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டவர் பயணிகளை அடித்தார்.

இதையடுத்து, பயணிகள் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். இச்சம்பவம் ராசிபுரம் பேருந்து நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வாலிபர் குறித்த தகவல் ஏதும் தெரியவில்லை. மேலும் அவர் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவரா, அல்லது வெளி நபரா என்பது யாருக்கும் தெரியாது என்றனர்.

இதுகுறித்து அப் பகுதியைச் சேர்ந்த கடை வியாபாரிகள், பொதுமக்கள், பேருந்து பயணிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இச்சம்பம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தற்போது இந்நிகழ்வு குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

Tags

Read MoreRead Less
Next Story