நடுரோட்டில் போதை இளைஞர் ரகளை; சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரல்!

அறந்தாங்கியில் புதுக்கோட்டை சாலையில் கஞ்சா போதையில் இளைஞர்கள் ஒருவர் மீது கல் வீசி தாக்கிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அறந்தாங்கியில் புதுக்கோட்டை சாலையில் தாலீப் ஜீவல்லரி எதிரே கஞ்சா போதையில் இளைஞர்கள் ஒருவர் மீது கல் வீசி தாக்கிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய நகரங்களில் ஒன்றாறது அறந்தாங்கி நகரமாகும். இந்த அறந்தாங்கி நகரில் தற்போது அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சாவானது அதிக அளவில் அறந்தாங்கி நகரப்பகுதிக்குள் புழங்கி வருவதுடன் இளைஞர்கள் பலர் கஞ்சா போதைக்கு அடிமையாகி .... அவர்கள் என்ன செய்கிறோம் என்று உணராமல் கூட. பொதுமக்கள் மற்றும் பெண்கள் அதிகம் நடமாடக்கூடிய பெரியகடைவீதி யின் முக்கிய பகுதியான VS தியேட்டர் அருகாமையில் உள்ள புதுக்கோட்டை பிரதான சாலையில் நின்று கொண்டு அப்பாவி மக்களுக்கு இடையூருகள் செய்வதுடன் அளவுக்கதிகமான கஞ்சா போதையில் மக்கள் அதிகளவில் நடமாட்டம் உள்ள சாலைகளில் போதையில் இளைஞர்கள் ஒருவருக்கொருவார் கற்கலால் தாக்கிக்கொள்வதுடன்...சாலையில் மற்றொரு இளைஞர் ஒருவரை அடித்து சாலையில் விழ வைத்தது வீடியோவானது சமூக வலைதலங்களில் காட்டுத்தீயாய் பரவி வருவதுடன் பொதுமக்களுக்கு பெரிய அச்சத்தை உருவாக்கியுள்ளது...

உடனடியாக இது சம்ந்தமாக சம்பத்தப்பட்ட அறந்தாங்கி காவல்துறையினர் இச்சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு பொதுமக்களுக்கு.இடையூரு விளைவித்த போதை இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென.பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர்

Tags

Next Story