"உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" புதிய திட்டம் அறிமுகம்

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் புதிய திட்டம்  அறிமுகம்

ஆட்சியர் கற்பகம் 

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் நடக்கும் உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய உள்ளார்.

மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு, இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத்தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் ஒவ்வொரு மாதமும் கடைசி புதன்கிழமையன்று நடத்திட அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, களஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படியில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம், இன்று வேப்பந்தட்டை வட்டத்தில் அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். குறிப்பாக முதலமைச்சரின் காலை உணவு திட்டம், அரசுஅலுவலகங்கள், சுகாதார நிலையங்கள், குழந்தை மையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட வட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விரிவாக ஆய்வு செய்ய உள்ளார் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story