புதிதாக கதர் பொருட்கள் அறிமுகம்: ஆட்சியர் ஆய்வு!

தூத்துக்குடியில் காதி கிராம பொருள், பனை பொருள்கள் விற்பனை அதிகரிப்பது தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (27.05.2024), தமிழ்நாடு கதர் கிராம வாரியம், காதி கிராம பொருள், பனை பொருள்கள் விற்பனை அதிகரிப்பது தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்ததாவது: தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய உற்பத்தி பொருட்களாக கதர் ரகங்கள், கிராமப் பொருட்கள் மற்றும் பனைவாரிய பொருட்களின் விற்பனையினை அதிகரித்திடும் பொருட்டு புதிதாக பல்வேறு கதர் பொருட்களான கதர் ரகங்கள், கதர் பாலியஸ்டர் ரகங்கள், கதர் ரெடிமேட் ரகங்கள், கதர் போர்வை மற்றும் மெத்தை விரிப்புகள், கதர் துண்டு மற்றும் தலையணை உறைகள், கதர் பட்டு ரகங்கள், கதர் உல்லன் மற்றும் கம்பளி ரகங்கள், கிராமப் பொருட்களான தேன் பாட்டில், கம்யூட்டர் சாம்பிராணி, கப் சாம்பிராணி, ஊதுபத்தி (மல்லிகை, ரோஸ், சாண்டல், லாவண்டர், கஸ்தூரி), குமரி காம்போ சோப்புகள், பிராக்ரன்ஸ் காம்போ சோப்புகள், நறுமண குளியல் சோப்புகள், (லாவண்டர், ரோஸ்) (ரெட் சாண்டல், சாண்டல்), குறிஞ்சி சாண்டல் சோப்பு, டிடர்ஜெண்ட் சலவை சோப்பு, டிடர்ஜெண்ட் டுஙைரனை (திரவ சோப்பு), சாரல் ஷாம்பூ, ஒண்டர் வாஷ் சலவை பவுடர், ஜவ்வாது, ஜவ்வாது ஸ்பிரே, கிப்ட் பேக் (ஊதுபத்தி, தீப்பெட்டி, ஜவ்வாது, பூஜா பவுடர், திரி, சூடம், நெய் விளக்கு), சூடம், சுகப்பிரியா வலி, நிவாரணி தைலம், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், கேழ்வரகு, தினை, மூங்கில் அரிசி மற்றும் பனைவாரிய பொருட்களான கருப்பட்டி, பனங்கற்கண்டு -சரல், பனங்கற்கண்டு - சலங்கை, சுக்கு காபி தூள் பவுடர், பனங்கற்கண்டு - சுக்கு காபி தூள், பனங்கிழங்கு மாவு, சுக்கு காபி பொடி (மிளகு, திப்பிலி, பனங்கற்கண்டு), கருப்பு கட்டி காபி தூள், பாம் ஜீஸ்,சுக்கு மிளகு திப்பிலி - கற்கண்டு பால்மிக்ஸ், சுக்கு, மிளகு, திப்பிலி, கருப்பட்டி, கற்கண்டு, பால்மிக்ஸ், ஆகிய பொருட்கள் அனைத்தும் இங்கு காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டது. மேலும் மகளிர் திட்டம் மூலம் காதி கிராப்ட் பொருட்களை மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்து விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கடைகளில் சேர்த்து விற்குமாறும், அரசு அலுவலர்கள் கதர் பொருட்களை வாங்கி பயனடைய வேண்டுமாறு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, கேட்டுக்கொண்டுள்ளார்.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, அனைத்து துறை அலுவலர்களும், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
