தனிஷ்க் ஜூவல்லரியில் சிறப்பு எக்ஸ்சேஞ்ச் சலுகை அறிமுகம்
சேலம் டாடா நிறுவனத்தின் தனிஷ்க் ஜூவல்லரியில் சிறப்பு எக்ஸ்சேஞ்ச் சலுகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சேலம் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள டாடா நிறுவனத்தின் தனிஷ்க் ஜூவல்லரியில் சிறப்பு எக்ஸ்சேஞ்ச் சலுகை அறிமுக விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக டாடா நிறுவனத்தின் ஏரியா விற்பனை மேலாளர் இக்னீஷ் கலந்து கொண்டார்.
இதுகுறித்து சேலம் தனிஷ்க் ஜூவல்லரியின் பங்குதாரர்கள் ஆனந்த்குமார், பாலகுமார் மற்றும் ரமேஷ் ஆகியோர் கூறியதாவது:- தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய தங்கத்திற்கு அதிகபட்ச மதிப்பை பெற என்னென்ன வழிகள் இருக்கின்றன? என ஆர்வத்துடன் தேட ஆரம்பித்துள்ளனர். எந்த நகைக்கடையிலும் வாங்கப்பட்ட பழைய தங்கத்தை ஏற்றுக்கொண்டு, அதற்கு பதிலாக வாடிக்கையாளர்கள் எளிமையான முறையில் சவுகரியத்துடன் புதிய தங்கத்தை மாற்றி கொள்வதுடன் அதிகபட்ச மதிப்பை பெறும் வகையில் எக்ஸ்சேஞ்ச் சலுகையை தனிஷ்க் ஜூவல்லரி அளிக்கிறது.
இதுவரை நாடு முழுவதும் உள்ள 400-க்கும் மேற்பட்ட தனிஷ்க் கடைகள் மூலம் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பழைய தங்க நகைகளை எக்ஸ்சேஞ்ச் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. பழைய நகை சிறப்பு எக்ஸ்சேஞ்ச் சலுகை மூலம் வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் பழைய தங்கத்தின் மதிப்பில் எந்த தள்ளுபடியும் இல்லாமல் நிபந்தனைக்குட்பட்டு முழு மதிப்பை பெறலாம். இந்தியாவில் எந்த ஜூவல்லரியில் இருந்தும் வாங்கிய 20 கேரட் மற்றும் அதற்கு மேற்பட்ட பழைய தங்கத்தின் மீது 100 சதவீத பரிமாற்ற மதிப்பை வழங்குகிறது. இந்த சலுகையின் போது வாடிக்கையாளர்கள் தனிஷ்க்கில் இருக்கும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட புதிய ஆபரண தொகுப்புகளில் இருந்து தங்களுக்கு பிடித்த நகைகளை சொந்தமாக்கி கொள்ளும் வாய்ப்பை பெறலாம் இவ்வாறு அவர்கள் கூறினர்.