முதலியார் குப்பம் படகு குழாமில் புதிய வகை படகுகள் அறிமுகம்.

முதலியார் குப்பம் படகு குழாமில் இரண்டு புதிய வகை படகுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

.சென்னை - புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் செய்யூர் அடுத்து அமைந்துள்ளது ‘முதலியார் குப்பம் படகு குழாம்’. நூற்றாண்டுகளை கடந்த இந்த பகுதி முற்றிலும் இயற்கை சூழலுடன் காணப்படும். படகு குழாமின் சிறப்பு அம்சமே இதன் அருகில் அமைந்துள்ள தானாக உருவாகி தீவுப்பகுதி ஆகும். இந்த தீவு கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு குளம் செயல்பட்டு வருகிறது.

இந்தப் படகு குழாமில் சென்னை மட்டுமில்லாமல் பாண்டிச்சேரி செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த மக்களும் ண சுற்றுலா பயணிகளும் இந்தப் பகுதிக்கு ஏராளமாக வருகை புரிவார்கள் குறிப்பாக விடுமுறை நாட்களில் ‌ இந்த படகு குளம் மக்கள் கூட்டத்துடன் ஜெகஜோதியாக காட்சியளிக்கும் தனது குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் காதல் காதலியுடனும் இந்தப் பகுதியில் வருகை புரிந்து படகில் பயணம் செய்து தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து பயணிகள் மகிழ்வது வழக்கம்.

இந்த நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டிஸ்கோ படகு, மற்றும் பனானா படகு ஆகியவற்றை அறிமுகப்படுத்தி தற்போது இந்த படகு குழாமில் செயல்பட்டு வருகிறது இந்த இரண்டு புதிய படகுகளும் தமிழகத்திலேயே முதல் முறையாக இந்த படகு குழாமில் அறிமுகப்படுத்தி செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story