ட்ரோன் மூலம் காய்கறி பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் திட்டம் அறிமுகம்

நீலகிரியின் பிரதான தொழிலாக மலை காய்கறி சாகுபடி உள்ளது. சுமார் 2 லட்சம் விவசாயிகள் உள்ள நிலையில் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட பல்வேறு மலைக் காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். அவர்கள் பயிரிடும் மலை காய்க்கறி பயிர்களை கடந்த சில ஆண்டுகளாக நோய் அதிகமாக தாக்கி வருகிறது. அதனை விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகளை மருந்து தெளிப்பான்களை கொண்டு மனிதர்கள் மூலம் தெளித்து வருகின்றனர்.

இதனால் அதிக கால விரயம் ஏற்படுவதுடன், செலவும் அதிகமாகிறது. இதனையடுத்து மலை காய்கறி விவசாயிகள் மட்டுமின்றி தேயிலை விவசாயிகளும் பயன்பெறும் விதமாகவும் அவர்களை எதிர் காலத்தில் நவீன தொழில்நுட்ப விவசாய ஆர்வத்தை ஏற்படுத்த டுரோன் மூலம் மருந்து தெளிக்கும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கபட்டது.

உதகையில் உள்ள இந்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையத்தின் சார்பாக முதல் முறையாக அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு உதகை அருகே உள்ள பசவக்கல் கிராமத்தில் சுமார் 100 ஏக்கரில் மருந்து தெளிக்கபட்டது. இந்த டுரோன் மூலம் மருந்து தெளிக்க ஒரு ஏக்கருக்கு 500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கபடுகிறது. இதன் மூலம் கால விரயம் தவிர்க்கபடுவதுடன் குறைந்த செலவே ஆவதாக இந்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி தெரிவித்தார்.

Tags

Next Story