மாரத்தான் போட்டிக்கு ‘டி-ஷர்ட்’ அறிமுகம்

மாரத்தான் போட்டிக்கு ‘டி-ஷர்ட்’ அறிமுகம்

 டி-ஷர்ட் அறிமுகம் 

சேலம் சிட்டி மாரத்தான் போட்டிக்கு டி-ஷர்ட் அறிமுகம் செய்யப்பட்டது.
சேலம் ரம்யாஸ் ஈட்டர்நிட்டி உடற்பயிற்சி கூடம் 3-வது முறையாக நடத்தும் சேலம் சிட்டி மாரத்தான் போட்டிக்கு டி-ஷர்ட் அறிமுக விழா நடைபெற்றது. சேலம் சிட்டி மாரத்தான் போட்டிக்கான டி-ஷா்ட்களை எஸ்.எம். கார்ஸ் மாருதி நிறுவனத்தினர் வழங்கி உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், எஸ்.எம். மாருதி கார் நிறுவன சேர்மன் சுப்பிரமணி, நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் மற்றும் செயல் இயக்குனர் வம்சி ஆகியோர் டி-ஷர்ட்டுகளை அறிமுகப்படுத்தினர். மேலும் நிகழ்ச்சியில் சேலம் சிட்டி மாரத்தான் போட்டி ஏற்பாட்டுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story