அதிநவீன எண்டோஸ்கோப்பி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் அறிமுகம்
கோப்பு படம்
திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனையில் அதிநவீன எண்டோஸ்கோப்பி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனையில் அதிநவீன எண்டோஸ்கோப்பி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எண்டோஸ்கோப்பி என்பது இரைப்பையில் உள்ள திசுக்களின் நோய்களை கண்டறிய பயன்படுகிறது.
ஆனால், அல்ட்ராசவுண்டு மூலமாக குடலின் தோல் பகுதி மற்றும் வெளிப்புற திசுக்களின் நிலையை கண்டறியலாம். எண்டோஸ்கோப்பியில் அல்ட்ராசவுண்ட் வசதி உள்ளதால் உயர் அதிர்வெண் ஒலி அலைகள் வாயிலாக செரிமான பாதை, நுரையீரல், கணையம், பித்தப்பை, கல்லீரல்,
நிணநீர் கட்டிகள் மற்றும் சுற்றியுள்ள திசுக்களின் நிலையை துல்லியமாக கண்டறியலாம்.கணைய புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், செரிமான புற்றுநோயை கண்டறிந்து அதை வகைப்படுத்தவும் பெரிதும் பயன்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Next Story