திருச்செங்கோட்டில் பாராளுமன்ற தேர்தல் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்
மண்ணின் மைந்தராக இருக்க வேண்டும் அது தான் அதிகப் படியான வாக்குகளில் வெற்றி பெற வாய்ப்பாக அமையும் என ஆட்சி மன்ற குழு முடிவு எடுத்ததை அடுத்து முன்னர் அறிவிக்கப் பட்ட சூரியமூர்த்திக்கு பதிலாக மாதேஸ்வரனை வேட்பாளராக அறிவித்துள்ளோம். 40 தொகுதி களிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெறும் இடி, ஐடி, சிபிஐ, போன்றவற்றை கைப்பாவையாக கொண்டு எதிர்க்கட்சிகளைதேர்தல் பணிகள் செய்யவிடாமல் முடக்கி விடலாம் என ஒன்றிய அரசு கருதுகிறது.
கெஜரிவாலின் கைது அனுதாப அலையை தான் ஏற்படுத்தும் என்பதை மத்திய அரசு விரைவில் உணரும் நாமக்கல்மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் பேட்டி.
நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், மாவட்ட துணை செயலாளர் மயில்சாமி, மாநில சமூக வலைதள அணி பொறுப்பாளர் திருநங்கை ரியா, நகர செயலாளர் கார்த்திகேயன், நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல், எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மல்லசமுத்திரம் ஒன்றிய செயலாளர் பழனிவேல், விடுதலை கருத்துக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகிலன், ஆதித்தமிழர் பேரவை சரவணகுமார், நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்வகுமார்,திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்