அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்டம்

அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக கட்சியில் மறைந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த நிலையில் விருதுநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.டி இராஜேந்திர பாலாஜி மற்றும் அதிமுகவின் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும் செயல் வீரர்கள் கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. இராஜேந்திர பாலாஜி இன்றைய விருதுநகரில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் நிர்வாகிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடை பெற்றது. தமிழக மற்றும் புதுச்சேரி யில் அண்ணா திமுக கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. திமுக ஆட்சியின் குறைகள் அதிமுகவின் வெற்றிக்கு வழி வகுக்கும் என்றார் தமிழகத்தை பொறுத்தவரை இரண்டு முனை போட்டி மட்டும் தான். அதிமுகவுக்கும் திமுகவிற்கும் மட்டுமே போட்டி எனவும் அதிமுக கூட்டணிக்கும் திமுக கூட்டணிக்கு தான் போட்டி என்றார். இந்த கூட்டணியில் தொண்டர்கள் பலம் பொருந்திய கூட்டணி எனவும் எங்களின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்போம் என்றார் தமிழகத்தில் திமுகவிற்கான எதிர்ப்பு அலை வீசுகிறது என்றார் மேலும் அதிமுகவிற்கு தமிழகத்தில் ஆதரவு அலை வீசுகிறது என்றார். . மறைந்த விஜயகாந்த் கருப்பு எம்ஜிஆர் என்றும் ஒரு தலைவர் மறைவுக்கு பின்னர் தான் பெருமை வெளி உலகத்திற்கு தெரிய வரும் என்றார். அண்ணா திமுக தர்மத்தின் பக்கம் இருக்கிற கூட்டணி அமைத்திருக்கிறோம் என்றார். திமுக சொல்வதை மக்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும் நீட் தேர்வை ஒழிப்போம் என்று 2019 மற்றும் 2021 மற்றும் 2024 தேர்தலிலும் சொல்கிறார்கள் என்றார். 3 ஆண்டு திமுக ஆட்சியில் இருக்கும் போதும் ஏன் நீட் தேர்வை விளக்கிற்கு அழுத்தம் கொடுக்க வில்லை என கேட்டு கே.டி. இராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு திமுகவின் முப்பத்தி எட்டு எம்பிக்கள் ஏன் நாடாளு மன்றத்தை முடக்க வில்லை என ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பினார். அதிமுக தேமுதிக கூட்டணி என்பது ரத்தமும் சதையும் போன்றது என்றார். மேலும் பேசிய கே டி ராஜேந்திர பாலாஜி பிரதமராக நரேந்திர மோடி தமிழகம் வரும் போது எடப்பாடி பழனிச்சாமியும் வரவேற்றார் மு.க. ஸ்டாலினும் வரவேற்றார் என்றார். மேலும் வாக்கு சேகரிப்பின் போது தங்களுடைய சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டுமே தவிர செங்களையும் புகைப்படத்தையும் காண்பித்து வாக்கு சேகரிப்பது என்பது தவறு என்றார். மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக நீட் தேர்விற்கு போராடாமல் செங்கலை மட்டுமே காண்பிப்பது மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார். மேலும் திமுகவினர் மீது உள்ள குறைகளை மறைப்பதற்காகவே திட்டமிட்டு பொய்யைச் சொல்லி மக்களை திசை திருப்புகிறார்கள் என்ற விமர்சனம் செய்தார்.

Tags

Next Story