காபி விவசாயம் குறித்த அறிமுக கூட்டம்

காபி விவசாயம் குறித்த அறிமுக கூட்டம்

அறிமுக கூட்டம் 

மேட்டூரில் காபி விவசாயம் செய்வது குறித்து அறிமுக கூட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ளது பாலமலை ஊராட்சி இங்கு 33 குக்கிராமங்கள் உள்ளது. இந்த மலை கிராமத்தில் வாழை, நிலக்கடலை, மஞ்சள், நெல், ராகி, கம்பு உள்ளிட்ட சாகுபடிகள் மட்டுமே விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் ஊட்டி கொடைக்கானலை போல காபி போர்டு நிறுவனம் பாலமலை மலை கிராமத்திலும் காப்பி நாற்று பயிரிடுவதின் மூலம் கிடைக்கும் நன்மை குறித்து அறிமுக கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு காப்பி போர்டு உறுப்பினர், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.சந்திரசேகரன் தலைமை வகித்தா. காப்பி போர்டு நிறுவனத்தின் முதுநிலை தொடர்பு அதிகாரி தங்கராஜ் கலந்து கொண்டு மானியம் மூலம் காபி விவசாயம் பயிரிடுதல், தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல், காப்பி பயிர் செய்ய எதிர்கால வாய்ப்பு குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.நிகழ்ச்சியின் முடிவில்அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் என். சந்திரசேகரன் விவசாயிகளுக்கு காப்பிநாற்று வழங்கி காப்பி விவசாயத்தை ஊக்கப்படுத்தினார்.

Tags

Next Story