1101 செல்லாத தபால் ஓட்டுக்கள்; அதிர்ச்சியில் வேட்பாளர்கள்

1101 செல்லாத தபால் ஓட்டுக்கள்; அதிர்ச்சியில் வேட்பாளர்கள்

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 1101 தபால் ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளாக பதிவாகியுள்ளன.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 1101 தபால் ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளாக பதிவாகியுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகள் காஞ்சி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு மொத்தம் 17.48 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் 12 லட்சத்து 53 ஆயிரம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர்

மாவட்டத்தில் சராசரி வாக்குப்பதிவு 71.68 சதவீதமாக இருந்தது. குறைந்தபட்சமாக செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் 62% வாக்குப்பதிவு அதிகபட்சமாக மதுராந்தகம் தொகுதியில் 79 சதவீத வாக்கு பதிவாக இருந்தது. மேலும் தேர்தலில் பணிபுரியும் ஊழியர்கள் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்கும் இம்முறை தபால் வாக்கு அளிக்கப்பட்டது அவ்வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 7550 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது.

அதனை எட்டு மேஜைகளில் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்ட வகையில் திமுக வேட்பாளர் செல்வம் 3066 வாக்குகளும் , அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 1580 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்தோஷ் குமார் 414 நாட்களும் பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் 1139 வாக்குகளும் 154 வாக்குகளும் என மொத்தம் 6449 வாக்குகள் ஏற்கப்பட்டது. 1101 வாக்குகள் செல்லத்தக்கவை என தீர்மானிக்கப்பட்டு அனைவரும் ஒப்புக்கொண்ட நிலையில் நீராகரிக்கப்பட்டது. தபால் வாக்குகளை கூட அரசு ஊழியர்கள் முறையாக செலுத்தவில்லை என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டதும் எந்த கட்சிக்கும் வாக்களிக்கவில்லை என 154 வாக்குகளும் பதிவாகியுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எப்போதுமே தபால் வாக்குகளில் திமுக முன்னிலையில் வகிக்கும் என்ற ஒரு உண்மையை மீண்டும் நிரூபித்துள்ளது.

Tags

Next Story