அனுமதியின்றி செயல்படும் ஆவின் பாலகங்கள் குறித்து விசாரணை

அனுமதியின்றி செயல்படும் ஆவின் பாலகங்கள் குறித்து விசாரணை
திண்டுக்கல் நகரில் பிரதான சாலைகளில் ஆவின் பாலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆவின் பால் விற்பனைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் இந்த பாலகங்களில், முறைகேடாக புகையிலைப் பொருள்கள் உள்பட இதரப் பொருள்களும் சில இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே, பல ஆவின் பாலகங்கள் மாநகராட்சியிடம் முறையான அனுமதி பெறாமல் அரசியல்வாதிகளின் ஆதரவோடு செயல்பட்டு வருகின்றன.
இதனால், மாநகராட்சி நிா்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, குறிப்பிட்ட சில பாலகங்களுக்கான மின் இணைப்பை மட்டும் துண்டித்து, மாநகராட்சி அலுவலா்கள் நடவடிக்கையில் ஈடுபட்டனா். இந்த நிலையில், அனுமதியின்றி செயல்படும் ஆவின் பாலகங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் மாநகராட்சி நிா்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. இதில் 15 பாலகங்கள் மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது.