அனுமதியின்றி நடைபெற்ற கிளினிக் - மருத்துவ இணை இயக்குனர் விசாரணை

X
அனுமதியின்றி நடைபெற்ற கிளினிக் - மருத்துவ இணை இயக்குனர் விசாரணை
சிவகங்கை கோட்டை முனியாண்டி கோவில் அருகே அனுமதியின்றி டாக்டர் ஒருவர் கிளினிக் நடத்தி வருவதாக புகார் எழுந்ததால் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை கோட்டை முனியாண்டி கோவில் அருகே அனுமதியின்றி டாக்டர் ஒருவர் கிளினிக் நடத்தி வருவதாக புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில் மருத்துவ இணை இயக்குனர் கமலவாசன், டி.எஸ்.பி., சிபிசாய் சௌந்தர்யன் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கிளினிக்கில் அடிப்படை வசதி ஏதும் இல்லாமல், அரசு அனுமதி பெறாமல் உள் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தது தெரியவந்த நிலையில் கிளினிக்கில் இருந்த நோயாளிகளை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரித்து வருகின்றனர்
Next Story
