கீழ்வேளூர் காவல் நிலையத்தில் நாகை எஸ்பி ஆய்வு
எஸ்பி ஹர்ஷ் சிங் ஆய்வு
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் கீழ்வேளூர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தார். காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு தற்சமயம் புலன் விசாரணையில் உள்ள முக்கிய வழக்குகளை ஆய்வு செய்தார். எதிரிகள் கைதுசெய்யப்படாமல் உள்ள வழக்குகளில், உடனடியாக எதிரிகளை கைது செய்ய அறிவுரைகள் வழங்கினார். கோப்புக்கு எடுக்கப்படாமல் உள்ள வழக்குகளை ஆய்வு செய்து, நீதிமன்றத்திற்கு சென்று சம்மந்தப்பட்டவர்களை சந்தித்து, வழக்குகளை உடனடியாக கோப்புக்கு எடுக்க காவல் ஆய்வாளருக்கு அறிவுரைகள் வழங்கினார்.
மேலும் முன்னர் கொடுக்கப்பட்ட புகார் மனுக்களின் மனுதாரர்களின் தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தாங்கள் கொடுக்கப்பட்ட புகார் மனுவிற்கு உரிய நடவடிக்கைகள் நல்ல முறையில் எடுக்கப்பட்டுள்ளதா என கருத்து கேட்டறிந்தார். உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரடியாக வந்து புகார் மனு அளிக்கலாம் என தெரிவித்தார். புகார் மனுக்கள் மேலும் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை ஆய்வு மேற்கொண்டார்கள்.மேலு ம் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளில் எதிரிகளை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, நீதிமன்ற விசாரணையை விரைத்து முடிக்க காவல் ஆய்வாளர் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.காலையிலும், மலையிலும் பகல் நேர ரோந்து அனுப்பி, கூட்டம் உள்ள இடங்களில் ரோந்து காவலர்கள் சென்று சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதிக அளவில் இரவு ரோந்து அனுப்ப வேண்டும் எனவும் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் திருட்டு போன்ற எந்த சட்ட விரோத செயல்கள் நடைபெறாமல் இருக்க விழிப்புடன் இருக்குமாறு அறிவுரைகள் வழங்கினார்.