திருவண்ணாமலையில் முதலீட்டாளர்கள் கூட்டம்

மாவட்ட ஆட்சியர்
திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 10.45 ஏக்கரில் ரூ.2550.62 இலட்சம் மதிப்பீட்டில் உணவு பதப்படுத்தும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில் 5 ஏக்கரில் 5000 மெ.டன் கொள்ளளவு கொண்ட குளிர்ப்பதன கிடங்கு, சேமிப்பு கிடங்கு (2500 MT), பழங்கள் கனியவைக்கும் கூடம், அலுவலகத்துடன் கூடிய உணவகம் ஆகிய பொது கட்டமைப்புகள் கட்டண அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ள முதலீட்டார்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி உணவு பதப்படுத்தும் தொகுப்பினை தொழில் முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்கி தனியர் முதலீட்டில் ஏற்படுத்தி திருவண்ணாமலை மாவட்ட வேளாண் விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து கொள்ள பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக மாவட்ட ஆட்சியரால் வரும் 03.11.2023 அன்று பிற்பகல் முதலீட்டாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற உள்ளதைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதில் வங்கி பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட தொழில்மையம் ஆகியோர் பங்குபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், தெரிவித்துள்ளார்
