முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு
ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தில் 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1 லட்சம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவை களை உள்ளடக்கியதாகும். இதன்படி நடப்பு ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது.
விருதுக்கான குறிக்கோள் இளைய சமுதாயத்தினரின் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் அவர்களை நல்ல குடிமக்களாக உருவாக்குதல். இளைஞர்களை (15 முதல் 35 வயது வரை ) சமூகத் தொண்டுகளில் ஈடுபடுவதை ஊக்குவித் தல். தலைச்சிறந்த பணிகளை ஆற்றிய இளைஞர்களுக்கு அங்கீகாரம் அளித்து அவர்களை எதிர்கால தலைமைக்கு உருவாக்குதல் போன்றவையாகும். நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் 15 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் சமூக நலனுக்காக தொண்டு புரிந்தவராக இருக்க வேண் டும்.
விருதிற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு தமிழ் நாட்டில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் (சான்று இணைக்கப்படல் வேண்டும்). விருதிற்கு முந்தைய நிதி ஆண் டில் அதாவது 2023 முதல் -2024 வரை மேற்கொள்ளப்பட்ட தொண்டுகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விண்ணப்ப தாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் சமுதாயம் அல்லது சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உண்டா'கிய தாக இருக்க வேண்டும். மத்திய அல்லது மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது பல்லைக்கழகங்கள் அல்லது கல்லு£ரிகள் அல்லது பள்ளிகளில் பணிபுரிவோர் தகுதி இல்லை.
சமூக தொண்டுகளில் பொதுவான ஈடுபாட்டுடன் செயல்பட்டவராகவும், தாங்கள் வசிக்கின்ற பகுதிகளில் பொதுமக்களிடையே நன்மதிப்பு பெற்றவராகவும் இருப்பது முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதின் தேர்வின் போது கருத்தில் கொள்ளப்படும். விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www. spt.tn.gov.in பதிவிறக்கம் செய்து வரும் 15ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.